அதிக போதைக்காக ஊமத்தையை மதுவில் கலந்த இருவர் கைது
பொம்மிடி அருகே மதுவில் அதிக போதைக்காக ஊமத்தையை கலந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
அதிக போதைக்காக ஊமத்தையை மதுவில் கலந்த இருவர் கைது 26 மது பாட்டில்கள் பறிமுதல் பாப்பிரெட்டிப்பட்டி, டிச.16: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அருகே உள்ள கொப்பக்கரை பகுதியில் பொம்மிடி எஸ்ஐ விக்னேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் சாக்கு பையை தூக்கிக்கொண்டு தப்பியோட முயன்றனர்.அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் விடிவெள்ளி நகரை சேர்ந்த சீனிவாசன் (48), முருகன்(47) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த பையில் 26 மதுபாட்டில்கள் மூடி திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. திறந்த நிலையில் இருந்த பாட்டில்களை போலீசார்.முகர்ந்து பார்த்த போது,நெடி வீசியதாக தெரிகிறது.
இதுகுறித்து இருவரிடமும் விசாரித்ததில் அதிக போதைக்காக,ஊமத்தையை பிழிந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.