தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது !

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது !

வழக்கு பதிவு

தக்கலை அருகே தடை செய்யப்பட்டிருந்த புகையிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸ் படையினர், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கோழிப்போர்விளை அருகே நின்று கொண்டிருந்த தாசன்,மைரும் செல்வராஜ் ஆகியோர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

மேலும் அவர்களின் கையில் இருந்த பையை வாங்கி சோதனையிட்டபோது பையினுள் கூல்லீப், கணேஷ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அனுமதி இன்றி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் புகையிலை பொருட் களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story