விபச்சாரம் நடத்திய இருவர் கைது

தாராபுரத்தில் விபச்சாரம் நடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் அருகே உள்ள உடுமலை சாலையில் மின் நகர் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 5 பேர்களை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது. மின்நகர் இப்பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் ஆய்வாளர் அருள், மகளிர் துணையாய்வாளர் பாதம் பிரியா,‌ முத்துக்குமார் மற்றும் தலைமை காவலர்கள் கலைச்செல்வன் மற்றும் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் அப்பகுதியில் சென்று சோதனை நடத்தினர்.அப்போது ஒரு ஆணுடன் 4 -நான்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட போது அவர்களை பிடித்து 5-பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தளவாய்பட்டணம் அருகே பாப்பையின் புதூர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (எ) குமார்( 47) இவருடைய மனைவி பரிமளா தேவி (45) திருப்பூர் தோட்டத்து பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சான் மனைவி ஈஸ்வரி (37) தாராபுரம் உடுமலை ரோடு நாமகிரி மின் நகர் பகுதியில் சேர்ந்த ரங்கராஜ் மனைவி தேன்மொழி (39) தாராபுரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி ரம்யா (38) ஆகியோர் ஆண்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் மீது தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், பரிமளா, ஈஸ்வரி, தேன்மொழி, ரம்யா ஆகிய 5 பேர்கள் மீது பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தாராபுத்தில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் தாராபுரம் வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story