நன்னிலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
கோப்பு படம்
திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் வண்டிக்காரத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவாரூர் அருகே விஜயபுரம் கொடிக்கால் தெருவை சேர்ந்த முத்து என்பவரின் மகன் அருண் என்கிற அருண்குமார் மற்றும் நன்னிலம் ஸ்ரீவாஞ்சியம் புத்தாற்று பாலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நன்னிலம் பாக்கம்பருத்தியூர் வடக்கு தெருவை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகன் அபிஷேக் வயது 20 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3000 ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags
Next Story