மதுபானம் பதுக்கி விற்ற இருவர் கைது
காவல்துறை விசாரணை
கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் மதுபானம் பதுக்கி விற்ற இருவர் கைது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய் யப்படுவதாக, கெங்கவல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கெங்கவல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடம்பூர் ஊராட்சியில் -ரவி(41), கூடமலை ஊராட்சியை சேர்ந்த சக்திவேல்(47) ஆகிய இருவரும், தங்களது வீட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கெங்கவல்லி போலீசார் கைது செய்து, மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story