லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது
காவல் நிலையம்
மண்ணச்சநல்லூர் அருகே சுனைபுகநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை வாத்தலை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சுனைபுகநல்லூர் பகுதியில் வாத்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் மண்ணச்சநல்லூர் அருகே புக்காத்துறை மேட்டு தெருவைச் சேர்ந்த 35 வயதான பாரதிராஜா மற்றும் திருச்சி உய்ய கொண்டான்மலை 10 வது குறுக்கு தெருவை சேர்ந்த 36 வயதான சிவா ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் இருவரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூ. 200 போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story