லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

பைல் படம் 

குமாரபாளையத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று பகல் 12:00 மணியளவில் பகுதியில் ரோந்து சென்ற போது, பெராந்தர்காடு, ஆலாங்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் வெள்ளை சீட்டுகளில் நெம்பர் எழுதி, போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சீனிவாசன், 45, சஞ்சீவ்மூர்த்தி, 34, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து தலா 5 சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story