சட்டவிரோத புகையிலை விற்பனை – இருவர் கைது

சட்டவிரோத புகையிலை விற்பனை – இருவர் கைது
சங்கரன்கோவிலில் புகையிலை விற்பனை செய்த இருவர் கைது
தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவிலில் சட்டவிரோத புகையிலை விற்பனையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அருகே புகையிலை விற்பனை செய்வதாக நகர காவல் நிலைய எஸ்ஐ சுரேஷ் கண்ணன் தகவல் கிடைத்தது விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கே,ரெட்டியார்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (41) மற்றும் கீழக்கலங்களல் மாரிமுத்து (33) புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story