ரெயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் 18 கிலோ கஞ்சா கடத்திய 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா கடத்தல் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு ரோஜா ரமணன் மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த தன்பாத்-ஆலப்புழா ரெயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் ராஜ்பங்கா பகுதியை சேர்ந்த ஜிட்டு மஜி (வயது 26), அனில் லீமா (22) என்பதும், இவர்கள் ஒடிசாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை தன்பாத் ரெயிலில் கடத்தி சேலத்திற்கு வந்து இறங்கியதும், அதன்பிறகு சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு வேறு ரெயிலில் ஏறிச்செல்ல முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story