தங்க சங்கிலி பறித்த இருவர் கைது
தங்க சங்கிலி பறித்த இருவர் கைது
திருப்பூரில் அங்கன்வாடி பணியாளரிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை ஷெரீப் காலனி அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னமணி (48). இவர் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கெம்பைநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அன்னமணி பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஷெரிப் காலனி குறிஞ்சி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அன்னமணி கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இது குறித்து அன்னமணி திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த மணிமாறன் (28), தாராபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (27) ஆகியோரை கைது செய்து தங்க சங்கிலியை மீட்டனர்.
Next Story