யானை தந்தத்தை விற்க முயன்ற இருவர் கைது!

யானை தந்தத்தை விற்க முயன்ற இருவர் கைது!

கைது

8.5 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை 1 கோடி ருபாய்க்கு விற்க முயற்சி செய்த இருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை வனச்சரக எல்லைக்குட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன் தலைமையில் வனப் பணியாளர்கள் அய்யப்பன்,அருண்குமார், ரமேஷ்,மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த விசாகன்(40) நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(40) வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ (43) மற்றும் செல்வராஜ்(38) ஆகியோர் யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து விற்பணைக்காக வைத்திருந்த 4 அடி நீள்முள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் யானை தந்தமானது சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் வைத்திருந்ததாகவும் 8.5 கிலோ எடையுள்ள அதனை ஒரு கோடி ருபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.தொடர்ந்து அவர்கள் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருவரையும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து தலைமறைவான மேலும் இருவரை தனிப்படை தேடி வருகின்றனர்.

Tags

Next Story