கம்பி திருட்டு இரண்டு பேர் கைது
கம்பி திருட்டில் ஈடுபட்டவர் கைது
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் கம்பிகளை திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. கான்ட்ராக்டர். இவர், தரைப்பாலம் கட்டுவதற்காக 800 கிலோ கம்பிகளை வாங்கி வைத்திருந்தார். இந்த கம்பிகள் திருடு போனது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் கடந்த 2ம் தேதி ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி பூட்டை கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக கம்பிகளுடன் வந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தனர். அதில், பாச்சேரி கிராமத்தில் தரைப்பாலம் கட்ட வைத்திருந்த கம்பி எனவும், சங்கராபுரம் பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்காக பாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் ராஜாராம் 30, முத்து மகன் பாண்டியன், 27; ஆகியோர் கொண்டு சென்றதும் தெரிந்தது. உடன் கம்பிகளையும், டிராக்டரையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய பாச்சேரி ராஜேந்திரன் மகன் மகேந்திரன், 25; முத்தாப்பிள்ளை மகன் பாரதிராஜா, 30; ஆகியோரை தேடி வருகின்றனர்.
Next Story