திருப்பூரில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் பறித்த வழக்கில் இரண்டு பேர் கைது!

திருப்பூரில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் பறித்த வழக்கில் இரண்டு பேர் கைது!

கைது

திருப்பூரில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி ரூ. 2.5 லட்சம் பறித்த வழக்கில் 2 பேரை கைது செய்து நல்லூர் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் சூப்பர்வைசர் ரூ.2.5 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது. திருப்பூர் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் ரூ. 2.5 லட்சம் பறித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பர் வைசர் பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்த தனபால் (41) பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 3-ம் தேதி இரவு கடையை அடைத்து விட்டு மது விற்பனை செய்த பணத்துடன் கடையின் தனபால் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டுள்ளார். கடையில் இருந்து 200 மீட்டர் தூரம் சென்று நிலையில் இருட்டு பகுதியில் மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் தனபாலை வழி மறித்துள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி மது விற்பனை செய்த பணம் 2.50 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

காயமடைந்த தனபால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தனபால் நல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை சேர்ந்த அந்தோணி மைக்கேல் ராஜ் (18), முருகன் (42) என்பதும், தனபாலிடம் பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story