திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்ற வழக்கில் இருவர் கைது

திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்ற வழக்கில்  இருவர் கைது

கோப்பு படம் 

திருப்பத்தூர் கஞ்சா விற்ற வழக்கில் இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகர போலீசார் விரைந்து சென்று சோதனை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஞானவேல் ஆகிய இருவரும் வெளியூரிலிருந்தது 4.5 கிலோ கஞ்சா கொண்டு வந்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பேரில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த அண்ணாமலை ,ஞானவேல் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வியாழக்கிழமை இன்று மாலை 5மணி அளவில் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இருவரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story