கொலை வழக்கில் இருவர் கைது !

கொலை வழக்கில் இருவர் கைது !

கைது

பொன்னமராவதி அருகே கொலை வழக்கில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டார்கள்.
பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கப்பன்(24). கட்டட தொழிலாளியான இவர் கடந்த 23ம் தேதி அரியாண்டிப்பட்டி கண்மாய் கரையில் கத்தி மற்றும் மதுபாட்டிலால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த காத்தான் என்பவரது மகளை திருமணம் செய்து தருமாறு அடைக்கப்பன் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததும், இதனால் ஆத்திரமடைந்த காத்தான்(58), அவரது மகன் கதிரவன் (21) இருவரும் சேர்ந்து அடைக்கப்பனை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தந்தை, மகன் இருவரையும் போலீசார் கைது செய்து பொன்னமராவதிமாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story