இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலி

இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலி

கிணற்றில் வீழ்ந்து பலி 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவிலில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளகோவில் உப்புபாளையம் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் கோகுல் (8), ஜெயக்குமார் மகன் அஸ்வின் (8) ஆகிய இரு சிறுவர்கள் 3 வகுப்பு படித்து வருகிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் தங்களுடைய சைக்கிள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் காணவில்லை என அக்கம்பக்கம் தேடிய நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் அருகே சைக்கிள் மற்றும் சிறுவர்களின் துணிகள் கிடந்துள்ளது. இதை அடுத்து சிறுவர்கள் கிணற்றில் உள்ளே இறங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி தீவிரமாக தேடினர். பின்னர் சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களின் உடலையும் சடலமாக மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒரே பகுதியில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது கோடைவிடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும் இதுபோல் நீர்நிலைகள் குறித்தும் அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் எடுத்தது கூறவேண்டும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பள்ளிகள் கோடை விடுமுறை விடும் போதும் இது போல் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பலியாவது வேதனையளிக்கின்றது.

Tags

Next Story