குமாரபாளையம் அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயம்

போலீசார் வாகனம்

குமாரபாளையம் அருகே டூவீலர், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டையில் வசிப்பவர் கார்த்திக்ராஜ், 23. குமாரபாளையம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி. படித்து வருகிறார்.

இவர் நேற்றுமுன்தினம் மாலை 6மணியளவில், தன்னுடன் படிக்கும் பூபாலன் என்பவரை, பல்லக்காபாளையத்தில் உள்ள அவரது சித்தி வீட்டில் விட்டு வர வேண்டி, தன் ஹீரோ டூயட் என்ற டூவீலரில் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, சேலம் கோவை புறவழிச்சாலை, அருவங்காடு அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், சரக்கு வாகன ஓட்டுனர் செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த முருகன், 39, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story