தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு ரெண்டு நாளுக்கு லீவு !

தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு ரெண்டு நாளுக்கு லீவு  !

குமாரபாளையத்தில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

குமாரபாளையத்தில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட், மார்க்கெட் வளாகத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று, இன்று இரு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழா மார்ச். 7ல் நடைபெறவுள்ளது. இதனால் குமாரபாளையம் தினசரி காயாக்ரி மார்க்கெட் நேற்று மற்றும் மார்ச் 7 ஆகிய இரு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story