திண்டிவனம் அருகே வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் பலி

திண்டிவனம் அருகே வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் பலி

விபத்தில் உயிரிழந்தவர் 

திண்டிவனம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் முருகன் (வயது 40). இவர் கோனேரிக்குப்பத்தில் இருந்து டிராக்டரில் வேப்பமர கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒலக்கூரில் உள்ள எடைமேடையில் எடை போட சென்றார். பின்னர். அங்கிருந்து பாங்கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதே போல் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் நாகராஜ் (54). இவர் ஈச்சேரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags

Next Story