குளத்தில் மூழ்கி நண்பர்கள் இருவர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்

குளத்தில் மூழ்கி நண்பர்கள் இருவர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்

பைல் படம் 

தூத்துக்குடி அருகே குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த இருவரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (25). கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுபாலன் (26) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரகாஷ் (25), முருகேசன் (25) ஆகியோருடன் தங்களது நண்பரான பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் நேற்று மாலை அனைவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு பண்டாரவிளை குளம் சுடலைமாடன் கோவில் படித்துறையில் குளித்தபோது ஏசுபாலன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து ஊர்மக்கள் சடலத்தை மீட்டுள்ளனர். இது குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி நண்பர்கள் 2பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story