ஶ்ரீ சாரதாஸ் லிட்டில் ஜீனியஸ் பள்ளியில் இரு பெரும் விழா

ஶ்ரீ சாரதாஸ் லிட்டில் ஜீனியஸ் பள்ளியில் இரு பெரும் விழா

ஶ்ரீ சாரதாஸ் லிட்டில் ஜீனியஸ் பள்ளியில் இரு பெரும் விழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீ சாரதாஸ் லிட்டில் ஜீனியஸ் பள்ளியில் இரு பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் ஸ்ரீ சாரதாஸ் லிட்டில் ஜீனியஸ் பள்ளியில் பாப்பாட் பலூசா, மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்புடன் ஓவிய கண்காட்சி ஆகிய இரு பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. முதல்வர் வித்யா வரவேற்றார். பள்ளி தாளாளர் பாலாஜி தலைமை வகித்து "பாப்பாட் பலூசா” நிகழ்வை தொடங்கி வைத்து வாழ்தினார்.

நிகழ்ச்சியில் 22 மாணவ பெற்றோர்கள் கலந்து கொண்டு வடகம் மற்றும் கூழ் வகைகள் தயார் செய்து காட்சிபடுத்தி விளக்கம் அளித்தனர். அதாவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும் கூழ் வகைகளான ராகி கூழ், மூங்கில்கரிசி கூழ், கருப்பு கவுணி அரிசி கூழ், குடல்வாழை அரிசி கூழ், கம்மங் கூழ், சத்துமாவு இனிப்பு கஞ்சி, மக்காசோளக் கஞ்சி, கோதுமை கஞ்சி, சிறுதாணிய கஞ்சி மற்றும் வடகம் வகைகளில் ராகி வடகம், பூசணி, பீட்ரூட், கேரட், ஜவ்வரிசி, அரிசி,கோதுமை உட்பட பல்வேறு பிரிவுகளில் வடகம் செய்தனர்.

தயாரிப்பு முறைகளை மாணவ- மாணவியர்கள் நேரடி பயிற்சி பெற்றனர். தொடர்ந்து ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கே.ஆர். குழுமத் தலைவர் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். ஓவிய ஆசிரியர் கார்த்திகைச் செல்வம், தலைமை ஆசிரியர் வராகவி முருகேசன், மேனாள் வேளாண் அறிவியல் கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தது காட்சிபடுத்தப்பட்ட ஓவியங்களான ஆப்ரிக்கன் ஓவியம், மண்டலா ஓவியம், தெய்வ உருவ ஓவியம், 3டி ஓவியங்கள், கொட்டாங்குச்சி ஓவியம், க்ளாஷ் ஓவியம்,கல்லோவியம், பேப்பர் கிராப் ஓவியம், ஐஸ் குச்சி ஓவியம், கண்ணாடி ஓவியம், நடனஓவியங்களை பார்வையிட்டு பள்ளி மாணவ- மாணவியர்களின் கலைத்திறன் பயிற்சியை பாராட்டினர். துணை முதல்வர் மகேஸ்வரி நன்றி கூறினார். திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story