இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம் - காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
காவல்துறை விசாரண
விருதுநகர் சிவகாசி சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சார்ந்தவர் முனியசாமி இவர் தனது தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து கொண்டு முனியசாமி இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு விருதுநகர் சிவகாசி சாலையில் உப்போடை பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் திருத்தங்கள் பகுதியைச் சார்ந்த சரவணக்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி வந்து முனியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த முனியசாமி மற்றும் அவருடைய தந்தை கணேசன் ஆகிய இருவருமே காயமடைந்த நிலையில் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பிவிட்டனர் சிகிச்சை பெற்று வரும் முனியசாமி அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story