விருதுநகர் அருகே கவுண்டன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - இரண்டு பேர் படுகாயம்
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் அருகே கவுண்டம்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது இந்த பட்டாசு ஆலையில் உள்ள 15 அறைகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் சிறுவர்கள் வெடிக்கும் பாம்பு மாத்திரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் பட்டாசு ஆலையில்தொழிலாளர்கள் பாம்பு மாத்திரைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளன். இந்த நிலையில் தயார் செய்யப்பட்ட பாம்பு மாத்திரைகளை இயந்திரங்கள் மூலம் கட்டிங் செய்யும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் போது பாம்பு மாத்திரைகளை இயந்திரத்தில் கட்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கவுண்டம்பட்டியை சேர்ந்த துரைசாமி (40) மற்றும் அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த சரவணன் (45) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். மேலும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்தவர்கள் காயமடைந்த இரண்டு தொழிலாளர்களை உடனடியாக மீட்டு சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் ஆமத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்தனர். மேலும் இந்த வெடிவிபத்து சம்மந்தமாக ஆமத்தூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Next Story