இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி இருவர் பலி

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி இருவர் பலி. ஒருவர் படுகாயம். போலீசார் விசாரணை.
விருதுநகர் பெத்தனாச்சிநகரில் குடியிருக்கும் கருப்பசாமி (38), நந்திரெட்டியாபட்டியை சேர்த்த கண்ணன் (29) மற்றும் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரமேஷ் ராஜா (41) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் விருதுநகர்செல்லும் போது, சிவஞானபுரம் விலக்கில் இருசக்கர வாகனத்தில் பின்பக்கமாக புதுப்பட்டி கோபாலபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வந்து மோதியதில் மூவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து படுகாயத்துடன் கீழே விழுந்தனர். விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரையும் விருதுநகர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப் பட்ட நிலையில் கருப்பசாமி என்பவரும் இறந்து விட்டார். படுகாயமுற்ற டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்ராஜாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இருந்த இருவரும் மினிபஸ் ஓட்டுனராக பணி புரிந்து வந்ததாகவும். அரசு பேருந்து ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலபுரம் தீபக்குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story