கார் மோதிய விபத்தில் இருவர் பலி
விபத்து
திண்டுக்கல் அருகே விபத்தில் இரண்டு பூ விவசாயிகள் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, மல்லனம்பட்டி அருகே பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு பூ கொண்டு வந்து கொண்டிருந்தபோது மதுரை சேர்ந்த முகமது பைசல் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது .இதில் பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் பலியானார்கள். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story