மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு - எம்.எல்.ஏ காந்திராஜன் ஆறுதல்
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ ஆறுதல்
வடமதுரை அருகே கொம்பேறிபட்டி மம்மானியூரை சேர்ந்த கூலித் தொழிலாளி சுந்தரம். இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த நவ.5ல் ஏற்பட்ட மின்கசிவால் சுந்தரத்தின் மூத்த மகள் அழகுமீனா, 2வது மகன் குமார் ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்தனர். இந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் மம்மானியூர் சென்றார். அப்போது தனது சொந்த பணத்தில் ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், சுந்தரம் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. 3 சென்ட் இலவச வீட்டு மனையுடன் வீடு கட்டவும் உத்தரவு வழங்கப்படும் .என்றார்.
Next Story