தூவாக்குடி விபத்துகளில் இருவா் பலி
கோப்பு படம்
திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா் (49), அலங்கார வேலைகள் செய்பவா். சனிக்கிழமை நள்ளிரவு இவா் இருசக்கர வாகனத்தில் திருவெறும்பூரிலிருந்து துவாக்குடி நோக்கி திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்புறம் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தாா்.
இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சசிகுமாா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அதேபோல் திருச்சி மாவட்டம், கும்பக்குடி வேலாயுதங்குடியைச் சோ்ந்தவா் பழனி (78). இவா் துவாக்குடி - மாத்தூரா் வளைவு சாலை குபேரன் நகா் அருகே தேசிய நெடுஞ்சாலையை வெள்ளிக்கிழமை கடக்க முயன்றபோது, அந்த வழியே வேகமாக வந்த வாகனம் மோதி காயமடைந்தாா்.
இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.