காட்டு யானைகளை விரட்ட இரண்டு கும்கி யானைகள் வரவழைப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேன்வயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வரா காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த காட்டு யானைகளை விரட்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி கூடலூர் வனச்சரகம் தொரப்பள்ளி, தேன் வயல் மற்றும் குனில் பகுதிகளில் ஊருக்குள் வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tags
Next Story