இரண்டு லட்சம் மதிப்பிலான் உயர் ரக போதை பொருள் பறிமுதல்!

இரண்டு லட்சம் மதிப்பிலான் உயர் ரக போதை பொருள் பறிமுதல்!

போதை பொருள் வைத்திருந்த நபர்கள் கைது

இரண்டு லட்சம் மதிப்பிலான் உயர் ரக போதை பொருள் பறிமுதல். விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது.
கோவை:தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்த போது சுமார் 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய 70 பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஆஷ்மா காதுன்(40)ஜஹீரா காதுன்(29) இத்ரிஷ் அலி(29) குதிஜா காதுன்(37) அலிஹீசைன்(48)ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேற்படி போதை பொருளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. மேற்படி நபர்களை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2,10,000 மதிப்பிலான 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.கடந்த 01.05.2024 முதல் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 27 நபர்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்து 54.160 கிலோகிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story