ஆத்தூர் : மஞ்சினியில் தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு லட்சம் பறிமுதல்
பறக்கும் படை
ஆத்தூர் அருகே மஞ்சனியில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ₹2 லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும்,கூட்டுறவுத்துறை துணை பதிவாளருமான செந்தில்குமார் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெங்கவள்ளியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற காரை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.2, லட்சம் ரொக்க பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த நபர் கெங்கவல்லி அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர் மகன் அஜித் கண்ணா என்பதும் தனது வீட்டிற்கு முன் இரும்பு செட் அமைப்பதற்காக பொருட்களை வாங்க சென்றதும் தெரியவந்தது இருந்தும் உரிய ஆவணங்களின்றி இரண்டு லட்சம் ரொக்கத்தை எடுத்துச் சென்றதால் அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர்.
Next Story