பளுகலில் அதிக பாரம் ஏற்றிய இரண்டு லாரிகள் பறிமுதல்

பளுகலில் அதிக பாரம் ஏற்றிய இரண்டு லாரிகள் பறிமுதல்
பறிமுதல் செய்த லாரி
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் பாறை கற்கள், எம்சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் குமரி மாவட்டங்களில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளின் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்தின் உத்தரவின் பேரில் கண்ணுமாமுடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இரண்டு லாரிகளிலும் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வாகனங்களை பளுகல் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story