உதட்டில் பிரஷ் வைத்து 'ஒரே நேரத்தில் இரு ஓவியம்'

உதட்டில் பிரஷ் வைத்து ஒரே நேரத்தில் இரு ஓவியம்

 சிவனார்தாங்கல் ஓவிய ஆசிரியர் செல்வம், தன் உதட்டில் இரண்டு பிரஷ்களை வைத்து, ஒரே நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்தின் படங்களை வரைந்து அசத்தினார்.  

சிவனார்தாங்கல் ஓவிய ஆசிரியர் செல்வம், தன் உதட்டில் இரண்டு பிரஷ்களை வைத்து, ஒரே நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்தின் படங்களை வரைந்து அசத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் சு.செல்வம் விஜயகாந்த் மறைவுக்கு ஓவிய அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் என்பதை குறிக்கும் வகையிலும் தன் "உதட்டில்" இரண்டு பிரஷ்கள் வைத்துக் கொண்டு "ஒரே நேரத்தில்" முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் இருவர்களின் படங்கள் வரைந்தார்.

விஜயகாந்த் அவர்களை தமிழ் திரையுலகில் கருப்பு எம்ஜிஆர் என கொண்டாடப்பட்டார், தமிழ் உச்ச நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த், மற்றவர்கள் பந்தா காட்டும் போது, விஜயகாந்த் மட்டும் ரொம்பவே எளிமையாக என பழகியுள்ளார், அதெல்லாம் விட ரொம்பவே முக்கியமானது, தங்களை சந்திக்க வரும் யாரும் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் விஜயகாந்த். முன்பெல்லாம் ராமாபுரம் தோட்டத்தில் இருந்த எம்ஜிஆரை சந்திக்க செல்லும் யாரும் சாப்பிடாமல் வெளியே செல்ல முடியாதாம், யாராக இருந்தாலும் முதலில் சாப்பிட்டீங்களா எனக் கேட்டு அவர்களுக்கு வயிறார உணவு கொடுப்பதுதான் எம்ஜிஆரின் வழக்கம்.

இதற்காக ராமாபுரம் தோட்டத்தில் எப்போதும் உணவு சமைத்துக் கொண்டே இருப்பார்களாம், எம்ஜிஆருக்கு பின்னர் விஜயகாந்த் அவர்களும் வீடாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் தன்னை பார்க்கவரும் அனைவரும் சாப்பாடு போட்டு பாசம் காட்டுவதில் விஜயகாந்த் அவர்கள் கருப்பு எம்ஜிஆராக வாழ்ந்துள்ளார்.

கேப்டன் மறைவுக்கு ஓவிய அஞ்சலி செலுத்து விதமாகவும், கருப்பு எம்ஜிஆர் என்பதை குறிக்கும் விதமாகவும் ஓவிய ஆசிரியர் செல்வம் தன் "உதட்டில்" இரண்டு பிரஷ்கள் வைத்துக்கொண்டு ஒரு பிரஷில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஓவியமும், மற்றொரு பிரஷில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் ஓவியமும் ஒரே நேரத்தில் ஐந்து நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் என்பதைக் குறிக்கும் விதமாக ஒரே நேரத்தில் எம்ஜிஆர் படமும் விஜயகாந்த் படமும் வரைந்தது அருமை என்று கூறினார்கள்.

Tags

Next Story