நெல்லையில் வாட்ச் செல்போன்களை பறித்த இருவர் அதிரடி கைது

நெல்லையில் வாட்ச் செல்போன்களை பறித்த இருவர் அதிரடி கைது

கோப்பு படம் 

நெல்லையில் வாட்ச் செல்போன்களை பறித்த இருவர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாநகர மானூர் அடுத்துள்ள வால்வீச்சு ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (30). இவர், பழையபேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (22), இசக்கி (19) ஆகியோருடன் இன்ஸ்டாவில் பழகி வந்துள்ளார்.இதனை தொடர்ந்து அவர்களை பார்ப்பதற்காக நெல்லைக்கு சென்றபோது, காட்டுக்குள் அழைத்து சென்று வாட்ச், செல்போனை இருவரும் பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story