சேலம் அருகே ஓட்டலில் திருடிய இரண்டு பேர் கைது
கோப்பு படம்
சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர், தனது நண்பர்களான சசிகுமார், சரவணகுமார் ஆகியோருடன் சேர்ந்து சின்னசீரகாப்பாடி பகுதியில் பை-பாஸ் சாலையையொட்டி ஓட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த 1ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை பூட்டிவிட்டு கார்த்திக் வீட்டிற்கு திரும்பினார். அடுத்தநாள் காலையில் வந்து பார்த்த போது, ஓட்டலின் பின்பக்க கதவு பூட்டு. உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த டிவி, கல்லா பெட்டியில் இருந்த 1000 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி ஆட்டையாம்பட்டி போலீசில் கார்த்திக் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இத்திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பற்றி விசாரித்து வந்தனர். விசாரணையில் சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் பகுதியை சேர்ந்த சிவராஜ் (55), கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்தோஷ் (35) ஆகியோர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.