ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த இருவர் கைது

ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த இருவர் கைது

அதியமான் கோட்டை காவல் நிலையம் எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் இயந்திரத்தில் திருட்டில் ஈடுபட முயன்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.

அதியமான் கோட்டை காவல் நிலையம் எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் இயந்திரத்தில் திருட்டில் ஈடுபட முயன்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட அதியமான் கோட்டை காவல் நிலையம் எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்துள்ளது இந்த இயந்திரத்தில் இரண்டு பேர் பணம் நிரப்பும் இடத்தில் ஜிபிஎஸ் கேமராவை பொருத்தி விட்டு, எந்திரத்தில் எப்போது பணம் நிரப்புவார்கள் என்பதை அவர்கள் செல்போனில் உள்ள கேமராவில் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் ஏடிஎம் மையத்தில் வழக்கமாக ஜிபிஎஸ் சிக்னலோடு கூடுதலாக மற்றொரு சிக்னல் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் அந்த மையத்தை காவல்துறையில் தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தனர். இந்த நிலையில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பியதை அறிந்த அவர்கள் நேற்று இரவு பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு வந்தனர்.

அப்போது கடவுச்சொல் போட்டு எந்திரத்தை திறக்க முயன்றபோது அப்பகுதியில் மறைந்திருந்த காவல்துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதனை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த ராஜ் பால் சிங் மற்றும் குரு சேவ் சிங் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் பொறுத்திருந்த ஜிபிஎஸ் சிக்னல் கேமராவை பறிமுதல் செய்தனர் காவல் நிலையம் எதிரிலேயே உள்ள ஏடிஎம் மையத்தில் திட்டமிட்டு நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கும் என்ற இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story