குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூரில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், பழைய பாலக்கரை சாமிநாதன் நகர் சரவணன் என்பவரின் மகன் உதயகுமார் (வயது 25), புது கள்ளர் தெரு மகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மகன் கார்த்திகேயன் (21) ஆகிய இருவரும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ,கும்பகோணம் கிழக்கு காவல்துறை ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணத்தை ஏற்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரிலும், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நடுவர் (கூடுதல் பொறுப்பு) தெ.தியாகராஜன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story