சேலத்தில் பெண் உட்பட இரண்டு பேர் தீக்குளித்து தற்கொலை
பெண் தற்கொலை
சேலம் செவ்வாய்பேட்டை கருங்கல்பட்டியை சேர்ந்தவர் வசந்தா (68). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் முழுமையாக குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று. பாண்டுரங்ககோயில் தெரு பகுதியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். சிறிது நேரத்திலேயே அவர் உடல் கருகி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற செவ்வாய் பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் மற்றொரு சம்பவம்: சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல் (59).நகரமலை அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் பெயிண்டை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அடிக்கடி கூறி வருவார். அதேபோல் பலமுறை தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்தநிலையில் கடந்த 17ம் தேதி தின்னரை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுபற்றி சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.