கரட்டுப்பட்டியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

கரட்டுப்பட்டியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

விவசாய நிலம்

போடிநாயக்கனூர் கரட்டுப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலியானர்.

சோளப்பயிர் அறுவடை செய்யும் பொழுது குறுக்கே தாழ்வாக சென்ற உயர்மின் அழுத்த கம்பி டிராக்டர் மேல் அமர்ந்து வந்த நபர் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

டிராக்டர் ஓட்டிச் சென்ற மற்றொரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்ட நிலையில் போடி தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது கரட்டுப்பட்டி கிராமம். முழுக்க முழுக்க விவசாயி மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த இப்பகுதியில் இன்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள சோளத் தோட்டத்தில் இன்று சோல பயிர் அறுவடை நடைபெற்று வந்தது. இந்த அறுவடைப்பணியில் சோளப் பயிர் ஏற்றுவதற்காக சின்னப்பொட்டிபுரத்திலிருந்து கூலி வேலைக்கு வந்த பெருமாள் சாமி (32) டிராக்டர் மேல் அமர்ந்து சூலபயிர்கள் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

டிராக்டரை கரட்டுப்பட்டியை சேர்ந்த யுவராஜ்(21) என்றவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விவசாய நிலத்திற்கு குறுக்கே சென்ற உயர் மின்னழுத்த கம்பிகள் மிகத் தாழ்வாக சென்ற நிலையில் டிராக்டர் மீது அமர்ந்திருந்த பெருமாள் சாமி வைத்திருந்த கூடையில் உள்ள கம்பியில் உரசியதில் டிராக்டர் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் உடல் முழுவதும் மின்சாரம் தாக்கி நிலையில் பெருமாள் சாமி சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். டிராக்டரை ஓட்டிச் சென்ற யுவராஜா மின்சாரம் தாக்கி படுங்காயங்களுடன் உடனடியாக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி தீயணைப்புத்துறையினர் இன்வாரித்துறை உதவியுடன் அபகுதியில் மின்சாரத்தை துண்டித்து வண்டியில் கரிய நிலையில் உயிரிழந்த பெருமாள் சாமி உடலை மீட்டனர். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி தாலுகா காவல்துறையினர் இறந்த பெருமாள் சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடந்து விபத்து குறித்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய அறுவடை நிலத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story