பைக் மோதி இருவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
விபத்து
கந்திலிஅருகே இருசக்கர வாகணம் மோதி பாணி பூரி உரிமையாளர் உள்பட இருவர் உயிரிழப்பு.போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கந்திலி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சேகர் வயது 40 இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன இவர் கந்திலி அடுத்த கெஜல் நாயக்கன்பட்டி ஜோதி பள்ளி அருகில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பானி பூரி கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டிற்க்கு செல்ல பானி பூரி கடையை மூடிவிட்டு கடையில் உள்ள மின் பேட்டரியை அருகில் உள்ள பழ கடையில் வைப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது அதே பகுதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ரிஸ்வான் மகன் நூரு வயது ,(18) என்பவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று சேகர் மீது மோதியதில் சேகர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிட த்தில் உயிரிழநதார். மற்றும் இரசகர வாகனத்தை ஓட்டிவந்த வாலிபர் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செல்லும் வழியில் உயிரிழந்தார் கந்திலி போலீசார் சம்பவயிடத்திட்க்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் சிறார்கள் இரவு நேரத்தில் இதுபோல் வாகனத்தில் அதிவேகமாக சாகசம் செய்வது வாடிக்கையாக திகழ்ந்து வருகின்றது சிறார்கள் இரவு நேரத்தில் வீலிங் சாகாசாம் செய்து வருவதை தடுத்து இருந்தால் இது போன்ற உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். உடனடியாக துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இரவு நேரத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
Next Story