சாலை விபத்தில் இருவர் பலி
மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வந்தவாசியில் இருந்து சோத்துப்பாக்கம் செல்லும் சாலையில் கீதா திருமண மண்டபம் எதிரில் திருவண்ணாமலை மாவட்டம், வெளியம்பாக்கம் கிராமத்திலிருந்து சென்னைக்கு வீட்டு வேலைக்காக இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது வசந்தா ( வயது 45) என்பவரும்,அவரது மகன் கார்த்திக் வயது (25) ஆகியோர் மீது லோடு வாகனம் மோதியதில் இருவரும் சம்பா இடத்திலே உயிரிழந்தனர். அவர்களது உடலை கைப்பற்றி மேல்மருவத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இந்த விபத்து சம்பந்தமாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story