அரசு அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் தற்கொலை முயற்சி

துறையூரில் முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் மற்றும் ஒப்பந்தக்காரர் ஒன்றிய அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2020 மற்றும் 21 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி நடக்கும் பொழுது குடி மராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ஏறி குட்டை தூர்வாருதல் பணிகள் செய்யப்பட்டு அதற்கான பில் பட்டியல் வழங்கப்படும்.

இதுவரை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பில் தொகை வராததை கண்டித்தும், அதற்கு பிறகு செய்த பணிகளுக்கு மற்ற ஒப்பந்தக்காரர்களுக்கு பட்டியல் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தலா பத்து பத்து தூக்க மாத்திரைகளை முழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டு வருகிறது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உரிய விளக்கம் தர வேண்டும் எனவும் உடனடியாக பட்டியல் தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக நிர்வாகி மற்றும் ஒப்பந்ததாரர் தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story