கடையில் தகராறு செய்த இருவர் அதிரடி கைது

X
காவல்துறை
திருநெல்வேலியில் கடையில் தகராறு செய்த இருவரை போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரை சேர்ந்த ஷாகுல் ஹமீது மளிகை கடையில் வேலை பார்க்கிறார். கடந்த மாதம் 29ம் தேதி கடையில் இருந்தபோது சுந்தர்,வேல்ராஜ் கூலிங் தண்ணீர் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவரும் கலர் பாட்டில்களை உடைத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஷாகுல் ஹமீது தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை மேற்கொண்டு சுந்தர், வேல்ராஜ் ஆகிய இருவரை நேற்று (மார்ச் 1 ) கைது செய்தனர்.
Tags
Next Story
