புகையிலைப் பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது
வெள்ளக்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளக்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமுத்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேனாபதிபாளையம் ராமலிங்கம் கடையில் புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து ராமலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்து அவரது கடையிலிருந்து 25 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் முத்தூர் அருகே தண்ணீர் பந்தல் ராமசாமி (வயது 61) பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதை அடுத்து ராமசாமி கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து ஒரு கிலோ மதிப்புள்ள 90 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story