சின்னமனூரில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது!
சின்னமனூரில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் போலீசாருடன் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது சின்னமனூர் ஆர் சி ஸ்கூல் அருகே போடியைச் சேர்ந்த நாகராஜன் துருவப்பராஜா ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர்.
அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து 68 லாட்டரி சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Tags
Next Story