பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 பேர் பலி

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 பேர் பலி

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 பேர் பலி

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாதனூர் அடுத்த பாலூர் ஊராட்சி, புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர் மகன் கோபி (50),வெங்கடேசன் (56) மற்றும் கஜேந்திரன் மகன் கோபி (38).இவர்கள் 3 பேரும் கட்டிட தொழில் செய்து வந்தனர். 3 பேரும் ஒரே பைக்கில், ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு நிதி திரட்ட சென்றனர். அப்போது அந்த வழியில் உள்ள முத்துக்குமரன் மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.மலை உச்சிக்கு சென்ற அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினார்.அப்போது பைக் தரிக்கட்டு ஓடி மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த மக்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பாஸ்கர் மகன் கோபி மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கோபிக்கு இடது கால் நீக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story