பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

ஜெயங்கொண்டத்தில் செயின் பறிப்பு, கோவில் உண்டியல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

அரியலூர் மாவட்டத்தில் செயின் பறிப்பு மற்றும் பல்வேறு கோயில் உண்டியல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர் அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாது கடலூர் மாவட்டம் நெய்வேலி, முத்தாண்டி குப்பம், காடாம்புலியூர் காவல் நிலைய பகுதிகளில் உள்ள கோவில்களில் உண்டியலை உடைப்பது, நகைகளை திருடுவது போன்ற தொடர் திருட்டில் ஈடுபட்டபோது சிசிடிவி கேமராவில் பதிவான புகைப்படத்தைக் கொண்டு விசாரணை செய்தனர்.

விசாரணையில் புகைப்படத்தில் இருப்பவர் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்த தமிழ் பாரதி என தெரிய வந்தது தமிழ் பாரதியை தீவிரமாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் தமிழ் பாரதியை போலீசார் நேற்று கைது செய்தனர் மேலும் அவரிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 16 சவரன் நகைகளையும் மீட்டனர். அவருடன் தொடர்புடைய பூமுடையான் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்- என்பவரையும் போலிசார் கைது செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் திருடிய நகைகளை முந்திரி காட்டில் மறைத்து வைத்துக் கொண்டு கடந்த மூன்று மாத காலமாக முந்திரி காட்டிலேயே மறைந்து வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது ஏற்கனவே தமிழ் பாரதிக்கு அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி ஆண்டிமடம் உடையார் பாளையம் இரும்புலிக்குறிச்சி செந்துறை அரியலூர் ஆகிய காவல் நிலையங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story