பள்ளி மாணவிகள் இரண்டு பேர் மாயம்

பள்ளி மாணவிகள் இரண்டு பேர் மாயம்

மாணவிகள் மாயம்

சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாப்பாடு வாங்குவதற்காக சென்று மாயமான மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி சங்கரன் பிள்ளை சாலை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவருடைய மகள் ஹன்சிகா (13), மற்றும் சுகன்யாவின் சகோதரி மகள் கீர்த்தனா (16) இருவரும் திருச்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். சுகன்யா செயற்பகுதியில் தள்ளுவண்டி கடையில் பல வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கீர்த்தனாவும் ஹன்சிகாவும் சாப்பாடு வாங்குவதற்காக சத்திரம் பேருந்து நிலையப் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை அவர்களை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தோம் கிடைக்காததால் இது பற்றி திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சுகன்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story