தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
சின்னசேலத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.
சின்னசேலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கதிரவன்,61; இவரது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்ததற்காக கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல், கோபால் மகன் மணிகண்டன் என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சுகந்தன்(பொ) உத்தரவின்பேரில், ஹான்ஸ் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கும் சின்னசேலம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சண்முகம் நேற்று 'சீல்' வைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரபேகா, முதல்நிலை காவலர் குருநாதன் உடனிருந்தனர்.
Next Story