திருவாரூர்: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
முத்துப்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் ரவி என்பவரின் மகன் ஆனந்த் (வயது 30 ). இவர் நடத்தி வரும் கடையில் சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது . அதேபோல் முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்கா பகுதியில் ஜலாலுதீன் (வயது 50 ) இவர் கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த கடைக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
Next Story