இரண்டு மணிநேரத்தில் மீட்கப்பட்ட இரண்டு பவுன்!
நகையை மீட்டு உரிமையாளரிடன் ஒப்படைத்த போலீஸார்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், சுற்றுலா பயணி தவரவிட்ட நகையை இரண்டு மணிநேரத்தில் மீட்டு உரிமையாளரிடன் ஒப்படைத்த போலீஸார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மல் சிங். இவர் இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு வெளியே திரும்பியபோது அவரது கையில் இருந்த 2 பவுன் தங்க பிரேஸ்லெட் நகையை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் இதுகுறித்து அரசு தாவரவியல் பூங்கா முன்பு புதிதாக திறக்கப்பட்ட போலீஸ் உதவி மையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் துணை காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நிர்மல் சிங் கடைக்கு வெளியே வந்த போது, அங்கிருந்த பொருள் மீது கைபட்டு பிரேஸ்லெட் கீழே விழுந்தது தெரிய வந்தது. ஆனால் இது தெரியாமல் நிர்மல் சிங் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த பகுதிக்கு சென்று பார்த்ததில் பிரேஸ்லெட் அங்கேயே இருந்தது உடனடியாக பிரேஸ்லெட்டை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்தில் இரண்டு பவுன் நகையை மீட்டு கொடுத்த போலீஸாரை சுற்றுலா பயணிகள் பாராட்டினர்.
Next Story